
மரக்கறி விலை அதிகரிப்புபானது ஜனவரி வரை தொடரும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற காலநிலையுடன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று(29) முற்பகல் பாரியளவில் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, தம்புள்ளை நகரில் சில்லரை விற்பனை நிலையங்களில் பாகற்காய் ஒரு கிலோ 300 ரூபாவாகும், கத்தரிக்காய் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 500 ரூபாவுக்கும், தக்காளி ஒரு கிலோ 180 ரூபாவுக்கும், போஞ்சி ஒரு கிலோ 180 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 160 ரூபாவுக்கும், கோவா ஒரு கிலோ 160 ரூபாவுக்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடரக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.