
பயிர்களுக்கு மேலதிக பசளையினை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வருட நெற் பயிர்ச்செய்கைக்காக 2 இலட்சத்து 38 ஆயிரத்து 200 மெட்ரிக் டொன் யுரீயா பசளை தேவைப்படுகிறது. ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக ஒரு இலட்சத்து 70000 மெட்ரிக் டொன் யுரியா தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பெரும்போகத்தில் பயிர் செய்கையளவு அதிகரிக்க கூடுமென்பதால் எதிர்வரும் சில மாதங்களில் நெற்பயிர் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக மாத்திரம் 15 ஆயிரம் மெட்ரிக்டொன் யுரியா பசளையினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.