ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்திலும் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் உலக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்று.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர்அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மினி ஐபிஎல் அல்லது ஐபிஎல் ஓவர்சீஸ் என்ற பெயரில்போட்டிகள் நடத்தப்படும்.
8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி இரண்டு வாரங்களுக்குள் நடந்து முடியும்படி திட்டமிடப்படும்.
அமெரிக்கா, ஐக்கிய அரபு எமீரகத்தில் இந்த போட்டிகள் நடைபெறலாம் என தெரிவித்துள்ளார்.