தெற்காசிய சார்க் வலய சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 8ஆவது மாநாடு இன்று(04) கொழும்பில் ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ் ,இலங்கை ,பூட்டார் ,நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.
வறுமையிலிருந்து மீண்டும் தமது சமூகத்திற்காக சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்கள் பங்களிப்பு செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மகளீர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.