பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று(18) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுவரை தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காதமை சுட்டிக்காட்டியே, இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக, தபால் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.