சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கல்பிட்டி – கதிரமலை கடற்பரப்பில் வைத்து கடற்படை அதிகாரிகளால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த குறித்த 8 மீனவர்களும் புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.