மத்துகமை, பெலவத்தை மீகாதென்ன பிரதேசத்தில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமியொருவர் 8 மணித்தியால தேடலின் பின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி ஆள் நடமாற்றமற்ற காட்டுப் பகுதியொன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளார்.
அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்ற போதே சிறுமி கடத்தப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய நபர் அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் , பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்தே மேற்படி தேடுதலை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..