(FASTNEWS|COLOMBO) – 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான குறித்த நபர், பிஸ்கட் பொதி ஒன்றில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.