இன்றும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு

இன்றும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல இடங்களில் இன்றும்(05) சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிலவியது.

குறிப்பாக நகர் புரங்களில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், 3500 மெற்றிக் டன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று, இன்றைய தினம் நாட்டை வந்தடையவிருப்பதாக, லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.