
பொருளாதார வளர்ச்சி வேகம் 2020 இல் 3.5 சதவீதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்வரும் ஆண்டு 3.5 சதவீதமாக இருக்குமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த இந்த வளர்ச்சிக்கு சகல பொருளாதார செயற்பாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் அபிவிருத்திக்கு இது சாதகமான ஒத்துழைப்பாக அமையுமெனவும் மத்திய வங்கியின் புதிய அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது