
உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வு மற்றும் விரிவுரை என்பவற்றை இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள், பொலிசார் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 எனும் எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.