அரிசியின் விலை அதிகரிப்பு

அரிசியின் விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தைகளில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பெரும்பாலான அரிசி வகைகள் 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

மேலும், நிலவும் அரசி தட்டுப்பாடு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவுடன் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.