இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் சிங்கங்களது தாமதம் தொடர்பில் நாமல் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான இலங்கை குழாம் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தியாவுக்கு எதிரான இலங்கை இருபதுக்கு இருபது குழாம் அறிவிப்பதில் தாமதம் நிலவியது விளையாட்டுத்துறை அமைச்சரின் தாமதத்தினால் அல்ல, அது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தாமதத்தினாலேயே ஆகும் என தெரிவித்திருந்தார்

இலங்கை மற்றும் இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்டஇருபதுக்கு இருபது போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஐந்து நாட்களே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்