
மருதானை ரயில் நிலையத்தில் சலுகை விலையில் மரக்கறி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் மரக்கறி பொதியொன்றினை வழங்க ரயில் சேவை அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் நிலையத்திலேயே சலுகை அடிப்படையில் மரக்கறிகளை கொள்வனவு செய்து கொள்ள பயணிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.
சுமார் 10 வகையான மரக்கறிகளுக்கு இவ்வாறு இன்று(02) 3 மணி முதல் சலுகை விலையில் வழங்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.