(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 வயத்திற்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணிஇந்திய அணியை விழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதுவரை காலமும் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் உலகக்கிண்ண தொடர்களில் கிண்ணத்தை கைப்பற்றாத பங்களாதேஷ் அணி, அவர்களின் இளம் வீரர்கள் நாட்டிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவ் அணியின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் “இது எமது கனவு கடந்த இரண்டு வருடங்களாக எமது கடின உழைப்பினால் கிடைத்தது. எமக்கு களத்திக்கும் களத்திற்கு வெளியிலும் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கிய பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்றி.எங்கள் பந்து வீச்சாளர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டனர். என 19 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் அணி தலைவர் தெரிவித்தார்.”
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 19 வயதுக்குட்பட்ட தலைமை பயிற்சியாளராக கடந்த 2018 ஜூலை மாதம் முதல் நவீத் நவாஸை தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இறுதிப்போட்டியின் பல சந்தர்ப்பங்களில் இரு அணிகளின் வீரர்களும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் போட்டி முடிவடைந்த பின்னர் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
போட்டி முடிவடைந்தவுடன் இரு அணிவீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
போட்டி முடிந்தவுடன் பங்களாதேஷ் வீரர்கள் மைதானத்திற்குள் ஓடினார்கள்,அவர்கள் மூர்க்கமான உடல்மொழியை வெளிப்படுத்தினார்கள் எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
தகாதவார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரரை நோக்கி சீற்றத்துடன் பாய்ந்த இந்திய வீரர் ஒருவர் அவரை நிலத்தில் தள்ளி வீழ்த்தினார் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது பங்களாதேஷ் கொடி சேதமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
