
போலி வைத்தியர்களுக்கு எதிராக முறைப்பாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியர்களுக்கு எதிராக முறைப்பாடு மற்றும் தகவல் சேகரிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தை எதிர்வரும் வாரமளவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
