
கொவிட் 19 – மத்திய கிழக்கிலும் ஆதிக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | மத்திய கிழக்கு) – கொவிட் 19 வைரஸ் தொற்று தற்போது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 2,592 பேர் உயிரிழந்துள்ளதோடு, 77,150 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.