மரக்கறி விலையைப் பேண புதிய வேலைத்திட்டம்

மரக்கறி விலையைப் பேண புதிய வேலைத்திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரக்கறிகளின் விலையைப் பேணுவதற்கு புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறிகளின் விலை தற்போது பொருளாதார மத்திய நிலையத்தினால் பேணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்நிலையை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.