தன்னை விட 14 வயது சிறிய ஹீரோயினை காதலிக்கும் தேவ்

தன்னை விட 14 வயது சிறிய ஹீரோயினை காதலிக்கும் தேவ்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தன்னை விட 14 வயது சிறியவரான பாலிவுட் நடிகை முக்தா கோட்சேவை காதலிப்பது குறித்து நடிகர் ராகுல் தேவ் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் வில்லனாக நடித்து வரும் ராகுல் தேவ் விஜயகாந்தின் நரசிம்மா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி அஜித்தின் வேதாளம் படத்திலும் நடித்திருந்தார்

ராகுல் தற்போது பாலிவுட் நடிகை முக்தா கோட்சேவை காதலித்து வருகிறார். முக்தா கோட்சே தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமியின் காதலியாக நடித்தவர். ராகுலுக்கும், முக்தாவுக்கும் இடையே 14 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ள நிலையில் இது குறித்து ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

14 ஆண்டு வயது வித்தியாசம் பெரிதாக தெரியவில்லை. சந்தோஷமாக இருந்தாலே போதும். வயது வித்தியாசம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று ராகுல் தேவ் தெரிவித்துள்ளார்.

முதலில் நண்பர்களாக பழகினோம். பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்த்துக் கொண்டோம். எங்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது மறைந்த என் மனைவி ரீனாவின் குடும்பத்தாருக்கும், என் மகன் சித்தாந்துக்கும் தெரியும் என்கிறார் ராகுல் தேவ்.

ராகுல் ரீனா என்கிற பெண்ணை காதலித்து கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரீனா கடந்த 2009ம் ஆண்டு உயிரிழந்தார்.