பிரபல நடிகை மற்றும் மனைவிக்கு கொரோனா

பிரபல நடிகை மற்றும் மனைவிக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா ) – தானும், தனது மனைவி ரீடா வில்ஸனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

தனக்கும், வில்சனுக்கும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவரின் உதவியை நாடியதாக கூறுகிறார்.

எனவே இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹேங்க்ஸ் படப்பிடிப்பிற்காக கோல்ட் கோஸ்டில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.

மேலும், நோய்த் தொற்று குறித்து தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.