பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்க நடவடிக்கை

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது ஒருபுறம் இருக்கு புதிய வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை பஸ் திரப்பு நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.