
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சரிவை விட பாதிப்பு அதிகம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சுற்றுலாத் துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சுற்றுலாப் பயணிகளின் வருகை 18 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியானது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சரிவை விட அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியொன்று உருவாக்கப்பட்ட பின்னரே மக்கள் பயணம் செய்வதற்கும் விடுமுறையில் செல்வதற்கும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என தான் எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.