மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)- கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்கள் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கியுள்ள இன்னல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.