
நிவாரண நிதிக்கு 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்புக்காக இந்தியா பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.