
மஞ்சள் தூளை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்காணிக்க விஷேட நடவடிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஞ்சள் தூளை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்காணிக்கும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மஞ்சள் தூள் கிலோகிராம் ஒன்றுக்கு அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
இதற்கமைய. ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளின் அதிக பட்ச சில்லறை விலை 750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அண்மைக் காலங்களில் மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக, மஞ்சள் தூள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, மஞ்சள் தூள் கிலோகிராம் ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதற்கமைய, கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் நோக்கில், விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது