அஜர்பைஜான் நாட்டில் மிகவும் பிரபலமடைந்துவரும் மொடல்களில் ஒருவர் 23 வயதான Mahbuba Mammadzada தனது கற்பை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இவருக்கு வெளிநாட்டில் சென்று மேற்படிப்பை தொடரவும், தமது தாயாருக்கு என ஒரு வீட்டை வாங்கவும் பணம் தேவைப்பட்டது. இதனையடுத்து பிரபல ஆபாச இணைய தளம் ஒன்றில் தமது கற்புக்கான குறைந்தபட்ச விலையாக £89,000 என குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளார்.
மரியா என்ற புனைப் பெயரில் பதிவு செய்துள்ள மக்பூபா, அதில் தமது கோரிக்கையை முன்வைத்து வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளார்.
மிக அதிக தொகை அளிக்க முன்வரும் நபருடன் உறவு கொள்ள தாம் தயார் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இத்தாலிய நிறுவனம் ஒன்றிற்காக துருக்கியில் பணியாற்றிவரும் அவர், போதுமான பணம் கிடைத்தால் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.