
கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி நேற்று கடமைகளை பொறுப்பேற்ற போது
கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் புஞ்சி பொரள்ளையில் அமைந்துள்ள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று(14) பி.ப 1.45 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் கிராமிய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிஸன், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், சமூக ஒருமைப்பாட்டு ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி அமைச்சின் செயலாளர் திருமதி. ரேனுகா மற்றும் அரசியல் பிரமுகர்கள பலரும் கலந்து சிறப்பித்தனர்.
