(ஃபாஸ்ட் நியூஸ் | ஜமைக்கா) – உலகில் தன்னிகரற்ற தடகள வீரராக மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார்.
உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த மே 17 அன்று பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தனது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் போல்ட் என்று பெயர் சூட்டியுள்ளார் போல்ட்.
குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.



