
கொரோனா : உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் போகலாம்
(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொவிட் -19 எனும் கொரோனா தொற்றால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
அதில், உலக நாடுகள் கொரொனாவுக்கு எதிராக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தொற்று மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக சுதாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் , உலக நாடுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் போகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.