சாய் பல்லவி எடுத்த திடீர் முடிவு

சாய் பல்லவி எடுத்த திடீர் முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை சாய் பல்லவி, அரைகுறை ஆடையில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி, பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
நடிகை சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் “சினிமா வாழ்க்கையில் நான் திருப்தியாக இருக்கிறேன். நடிகையாக பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியங்கள் எனக்கு இல்லை. எல்லோருடைய மனதிலும் இருக்கிற மாதிரி நல்ல கதாபாத்திரங்கள் செய்து பாராட்டை பெற வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது. எனது பலம் பலகீனம் என்ன என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

வீட்டிலும் வெளியிலும் என்னை யாரும் ஒரு கதாநாயகியாக பார்க்கவில்லை. அவர்கள் வீட்டு பெண் மாதிரிதான் பார்க்கிறார்கள். நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் அவர்கள் மகள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பார்த்து அதன்பிறகுதான் நடிக்கலாமா என்று முடிவு எடுப்பேன்.

அரைகுறை உடையில் என்னால் நடிக்க முடியாது. 20 வருடங்களுக்கு பிறகு எனது குழந்தைகள் நான் நடித்த படங்களை பார்த்தாலும் அதை பார்த்து சந்தோஷப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். எனது அப்பா, அம்மா, சிநேகிதிகள் எனது படத்தை பார்த்தாலும் பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில்தான் நடிக்க சம்மதிக்கிறேன்.” இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.