சுஷாந்த் இனது இரண்டாவது காதலியிடம் விசாரணை

சுஷாந்த் இனது இரண்டாவது காதலியிடம் விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் |   மும்பை) – நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியிடம் பீகார் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா கடந்த 24 ஆம் திகதி ஒடிடி-யில் வெளியானது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து பொலிசார் கைப்பற்றினர்.

சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் பொலிசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்

இதையடுத்து ரியா, அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பாட்னா பொலிசார், மும்பை வந்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான டிவி நடிகை அங்கிதா லோகண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘Truth Wins’ என்று குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பானது.

மும்பை வந்துள்ள பாட்னா பொலிசார், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை அங்கிதா லோகண்டேவிடம் நேற்று விசாரணை நடத்தினர். அங்கீதாவின் வீட்டுக்குச் சென்ற பாட்னா பொலிசார் சுஷாந்த் சிங் பற்றியும் ரியா பற்றியும் அங்கீதாவின் காதல் பற்றியும் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.