93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்று(14) நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாவது கட்டத்தின் கீழ் 248 உள்ளுராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக கால அவகாசம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகி, 20 ஆம் திகதி முடிவடையும். வேட்பு மனுக்கள் திங்கட்கிழமை முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.