939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

(FASTNEWS|COLOMBO)- மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் கடற்படையினர் நேற்று(24) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கொண்ட 45 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பீடி இலைகளை இவ்வாறு கண்டு பிடித்துள்ளனர். .

மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.