
SLPP இல் பாலியல் இலஞ்சம் வழங்கினால் போட்டியிடலாம் : மதுஷா
(ஃபாஸ்ட் கிசுகிசு| கொழும்பு) – கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கோரிய தன்னிடம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் பாலியல் இலஞ்சம் கோரியதாக பிரபல சிங்கள நடிகை மதுஷா ராமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (25) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக கூறிவரும் கீதா குமாரசிங்க அந்த சந்தர்ப்பத்தில் எங்கே இருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியவர்களுக்கு மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் மிகச்சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.