
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23.4 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கொவிட் 19 பரவல் காரணமாக தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.