பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவின் கம்பஹா பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை பணத்திற்கு பெற்றுகொண்டுள்ளதோடு அதன் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதனை பெற்றுகொள்வதற்கு மற்றும் அலுவலக கட்டிடத்தை நிர்மாணிப்பததற்காக 2000 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இது தொடர்பில் எவ்வித கணக்கு அறிக்கைகளும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இப்பணத்தினை யார் வழங்கியது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போது பசில் அறக்கட்டளை உறுப்பினரான உபுல் திஸாநாயக்க, நிதி மோசடி விசாரணை பிரிவிடம், மக்கள் வங்கி மற்றும் பீபல்ஸ் லீசிங் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் டப்ல்யூ. காமினி கருணாஜீவவினால் இப்பணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதி விசாரணை மேற்கொள்வதற்கு வழக்கறிஞர் டப்ல்யூ. காமினி கருணாஜீவ தற்போது உயிரோடு இல்லை, அவர் 2013ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி மரணித்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சொந்தமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் போது அதன் பொறுப்பினை உயிரிழந்தவர்கள் மீது சுமத்துவதற்கு ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.