முடிவுக்கு வரும் ஹாரி – மேகன் மார்க்கல் பிரச்சினை

(ஃபாஸ்ட் நியூஸ் |  இங்கிலாந்து) – பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் ஹாரி – மேகன் மார்க்கல் பிரச்சினைகள் குறித்து அறிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திற்கு எதிராக ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் பேட்டியளித்திருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேகன் நிற பாகுபாடை சந்தித்ததாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும், பொருளாதார ரீதியாக கைவிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகன் மார்கெலும் சந்தித்த சவால்கள் குறித்து தெரிய வந்தது ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த கவலையடைந்தோம்.

ஹாரி – மேகன் மார்க்கல் பிரச்சினைகள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.