தவறிய ஜெனிலியா [VIDEO]

தவறிய ஜெனிலியா [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா கீழே விழுந்து தனது கையை உடைத்துக் கொண்டார்.

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

எப்போதும் குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என இன்றைக்கும் தனக்கே உரிய குறும்பு தனங்களோடு வலம் வரும் ஜெனிலியா தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டு இருக்கிறார். தான் கற்றுக்கொண்ட ஸ்கேட்டிங் திறமையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடலாம் என எண்ணியிருக்கிறார். அப்போது ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி கிழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

ஆனால் தனக்கு ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாத ஜெனிலியா எப்போதும் போல அதே குறும்பு சிரிப்புடன் இந்த வெற்றிக் கதை தோல்வியில் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்வேன் எனக் கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.