AstraZeneca தடுப்பூசிக்கு அயர்லாந்து தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  அயர்லாந்து) – AstraZeneca கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு அயர்லாந்து தடுப்பூசி செயலணி பரிந்துரைத்துள்ளது.

குறித்த கொரோனா தடுப்பூசியின் மூலம் இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், AstraZeneca கொரோனா தடுப்பூசிக்கும், இரத்தம் உறைதலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என இதுவரை கண்டறியப்படவில்லை என, அயர்லாந்து தடுப்பூசி செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன், இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அயர்லாந்து தடுப்பூசி செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.