இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று நேற்று(8) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின்(liu zhenmin) தலைமையில் இந்தக் குறித்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீன நிதியுதவி தொடர்பாகவும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின் (liu zhenmin) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(riz)