
தீப்பெட்டி கணேசன் உயிரிழந்தார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரேணிகுண்டா, அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று, துல்கர் சல்மானின் உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.
பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் பரோட்டா கடையில் வேலை செய்து வந்தார். மேலும் கொரோனா வைரஸ் பிரச்சினையால் லாக்டவுன் அமுலுக்கு வந்த நேரத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகக் கூறி வீடியோ வெளியிட்டார் தீப்பெட்டி கணேசன்.
அவருக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை கொடுத்து உதவினார் விஷால். மேலும் கவிஞர் சினேகனும் அவருக்கு உதவி செய்தார்.
இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் இருக்கும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.