
ஐ.நா அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.நா அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்களை எடுத்துக் காட்டுகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.