புத்தளத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் சேட்டை செய்த ஆட்டோ சாரதி கைது

புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் சேட்டை செய்த ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று(8) மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது.
வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் ஆட்டோ சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் ஆட்டோ சாரதியை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்க வில்லை.

பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் சிறுமியை வீட்டில் விட்டு சென்றுவிட்டார்.
ஆயினும் சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியை என்ன நடந்தது என கேட்டபோது சாரதியின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்தது.

தினமும் பாடசாலைக்கு சிறுமியை ஏற்றும் இச்சாரதி தொடர்ந்தும் இவ்வாறு சிறுமியுடன் முறைகேடாக நடந்து வீட்டில் சொல்லக் கூடாது அவ்வாறு சொன்னால் கத்தியால் வெட்டுவதாக அதட்டியுள்ளார்.

இதன் காரணமாக சிறுமியும் தனக்கு தினமும் நடந்ததை பெற்றோரிடம் மறைத்து வந்துள்ளார்.

எனினும் ஆட்டோ சாரதியின் வழமைக்கு மாறான செயலும் பிள்ளையின் அலங்கோலமுமே தற்போது இச்செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

இச்சம்பவத்தை மறைக்க ஆட்டோ சாரதியின் உறவினர்கள் சிறுமியின் தந்தை  பேரம் பேசியுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத  சில நபர்கள் முறைப்பாட்டை மீள பெற்றுக்கொள்ளுமாறு கேட்பதாக சிறுமியின் தந்தை எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இச்செயலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஒட்டோ சாரதியான 3 பிள்ளைகளின் தந்தை தற்போது பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.