கண்ணிவெடிகளை அகற்ற இலங்கைக்கு அமெரிக்கா நிதி

கண்ணிவெடிகளை அகற்ற இலங்கைக்கு அமெரிக்கா நிதி

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளால் நடந்துவந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது.

போரின்போது, தமிழர்கள் பகுதியில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா நிதி உதவி செய்து
வருகிறது.

1993-ம் ஆண்டில் இருந்து இதுவரை 43 மில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.279 கோடி) இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு மேலும் கூடுதலாக 1.745 மில்லியன் டாலர் (சுமார் ரூ.11 கோடி) நிதி வழங்குவதாக அமெரிக்கா நேற்று(8) அறிவித்தது.

கொழும்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கேஷப்பும், இலங்கை புனர்வாழ்வு, மறுகுடியமர்வு துறை மந்திரி டி.எம்.சாமிநாதனும் சந்தித்து பேசிய பின்னர் இந்நிதி உதவி அறிவிக்கப்பட்டது.

 

(riz)