வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு ஹெரோயின் விநியோகித்தவர் கைது

வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு நீண்டகாலமாக ஹெரோயின் விநியோகித்து வந்த தெமட்டகொட குடு லஹிரு எனும் நபர் நேற்று(12) கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 20 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது எனவும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொட பிரதேசவாசியான 29 வயதான குறித்த இவர் பெருமளவில் ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளார்.

இதற்கு முன்பும் பல தடவைகள் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீது ஏற்கனவே கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(riz)