நாட்டில் குற்றங்கள் மலிந்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ். பூங்குடிதீவு பாடசாலை மாணவியின் பாலியல் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாட்டில் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
ஏனெனில் நாட்டில் அந்த அளவிற்கு குற்றச்செயல்கள் மலிந்து காணப்படுகின்றன.
மரண தண்டனையினை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டில் இடம்பெறுகின்ற குற்றங்களை குறைத்துக் கொள்ள முடியும் என நாட்டு மக்கள் மனதில் பாரிய நம்பிக்கையொன்றுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எதிர்வரும் நாட்களில் ஆராயவுள்ளோம்.
இதேவேளை, பெண்கள் வண்புனர்வுக்குற்படுத்துவது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவரின் பொறுப்பின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு் தெரிவித்துள்ளார்.