போக்குவரத்து நெரிசலினை மையப்படுத்தி வெலிக்கட மற்றும் ராஜகிரிய பகுதி வீதிகளுக்கு பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறைக்கமைய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம், அந்தக் குறித்த பாதைகளில் மேலும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எப்படியிருப்பினும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மஹரகம பகுதியில் நடைமுறப்படுத்தப்பட்ட புதிய போக்குவரத்து முறை வெற்றியளித்துள்ளதாலேயே அந்த முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.