கொடதெனியா பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் கொலை வழக்கில் சமன் ஜெயலத்(கொண்டையாவின் சகோதரர்) என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப் போவதாக மினுவான்கொட நீதவான் தெரிவித்துள்ளார்.
இவர் முன்னதாக இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கொண்டையா என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் முதலில் கைதான 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் கொண்டைய்யாவின் மரபணுவும் குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொண்டைய்யாவின் சகோதரரான சமன் ஜெயலத்தின் மரபணு ஒத்துப் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் சிறுமி சேயாவின் தந்தையையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அது குறித்த முடிவுகள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.