பாகிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் சொயிப் மாலிக். 5 ஆண்டு இடைவேளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அவர் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று(13) தொடங்கிய முதல் டெஸ்டில் சதம் அடித்தார்.
33 வயதான சொயிப் மாலிக் 3–வது வீரராக களம் இறங்கி 124 ரன்கள் (அவுட் இல்லை) குவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் தனது சிறப்பான இந்நிலைக்கு மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவே காரணம் என்று சொயிப் மாலிக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, சானியா சமீபகாலமாக டென்னிசில் வெற்றிகளை குவித்து வந்தார். இது என்னை உத்வேகப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு ஆலோசனை வழங்கி உதவினார். எனது வெற்றிக்கு அவரே காரணம் என்றார்.