எக்னெலிகொட சம்பவத்துடன் கைதான இராணுவத்தினரின் சம்பளம் இடைநிறுத்தம்

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் சம்பளம் இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் குறித்த இராணுவ குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவ சட்டம் மற்றும் அரசாங்க சட்டத்திற்கமைய கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சம்பளம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அதிகாரி தொடர்பிலும் சேவை இடைநிறுத்தப்பட்டு ஏதேனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டால் அக்காலப்பகுதியினுள் அவர்களது சம்பளத்தை இடை நிறுத்தும் அதிகாரம், சட்டத்திற்கமைய இராணுவத்திடம் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.